வில்லனாக சூர்யா.! எதிர்பார்புக்கு மத்தியில் காப்பான் படம்

கதாநாயகர்கள் வில்லன் வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளனர்,  அஜித்குமார் வில்லத்தனமாக நடித்து வெளிவந்த மங்காத்தா படம் வசூல் அள்ளியது.

0
109

கதாநாயகர்கள் வில்லன் வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளனர்,  அஜித்குமார் வில்லத்தனமாக நடித்து வெளிவந்த மங்காத்தா படம் வசூல் அள்ளியது.

எந்திரன் படத்தில் ரஜினியின் ஒரு கதாபாத்திரம் வில்லனாக சித்தரிக்கப்பட்டு இருந்தது. 

ஏற்கனவே 24 படத்தில் மூன்று வேடங்களில் வந்த சூர்யாவின் ஒரு கதாபாத்திரம் வில்லத்தனத்தை பிரதிபலித்தது. 

தற்போது காப்பான் படத்திலும் சூர்யாவின் கதாபாத்திரத்தில் வில்லத்தனம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார் இதில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். 

இதில் சூர்யா உளவுத்துறை அதிகாரியாகவும், மோகன்லால் பிரதம மந்திரியாக நடிப்பதாகவும் கூறப்பட்டது.

படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதி கட்ட பணிகள் நடைபெறுகின்றன.

படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் நல்லவர் போல் இருந்தாலும் அதில் வில்லத்தனம் இருக்கும் என்று டைரக்டர் கே.வி.ஆனந்த் தெரிவித்துள்ளார். 

இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here