சாக்கடைக்குள் விழுந்த சிறுவனை தேடும் பணி தீவிரம்.!

கோரேகாவில் சாக்கடையில் விழுந்து மாயமான சிறுவனை தேடும் பணி இரண்டாவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

0
94

கோரேகாவில் சாக்கடையில் விழுந்து மாயமான சிறுவனை தேடும் பணி இரண்டாவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மும்பை கோரேகாவ் கிழக்கு அம்பேத்கர் சவுக் பகுதியை சேர்ந்தவர் சூரஜ் சிங், இவரது மனைவி சந்தியா.

இவர்களுக்கு சோனாலி என்ற மகளும், சித்தாந்த், திவ்யான்ஷ் ஆகிய 2 மகன்களும் உண்டு. 

3 வயதான திவ்யான்ஷ் கடந்த 10ம் திகதி இரவு அங்கு திறந்து கிடந்த சாக்கடைக்குள் விழுந்து விட்டான். 

நெஞ்சை பதற செய்யும் இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.

சிறுவன் கழிவுநீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

மீட்பு பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர், மாநகராட்சி மீட்பு குழு, போலீஸ் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

பொக்லைன் எந்திரங்கள் மூலம் சாக்கடை கால்வாய்களை தோண்டியும் பார்க்கப்பட்டது.

ஆனால் நேற்று முன்தினம் முழுவதும் தேடிப்பார்த்தும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந் நிலையில் நேற்று இரண்டாவது நாளாக தேடும் பணி தீவிரமாக நடந்தது, மீட்பு குழுவினர் அங்குள்ள பெரிய சாக்கடை கால்வாயில் இறங்கியும் தேடினர் ஆயினும் மாலை வரையிலும் மீட்க முடியவில்லை.

இதுபற்றி மீட்பு குழுவை சேர்ந்த அதிகாரி ஒருவர், சிறுவனின் உடலை விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here