இளம் வயதில் பிரபல தெலுங்கு நடிகருக்கு ஏற்பட்ட துயரம்.!

பிரபல தெலுங்கு நடிகர் அமித் புரோஹித் இவர் நடிப்பில் சம்மோகனம் என்ற தெலுங்கு படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது.

0
97

பிரபல தெலுங்கு நடிகர் அமித் புரோஹித் இவர் நடிப்பில் சம்மோகனம் என்ற தெலுங்கு படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது.

இந்த படத்தில் கதாநாயகியாக வந்த அதிதிராவின் முன்னாள் காதலர் கதாபாத்திரத்தில் அமித் புரோஹித் நடித்து இருந்தார். 

செவன் நைட்ஸ், ஆலாப் உள்ளிட்ட மேலும் பல படங்களில் நடித்துள்ளார்.

ஐதராபாத்தில் வசித்து வந்த அமித் புரோஹித்துக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது, உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார், அவருக்கு வயது 35 இளம் வயதில் அமித் புரோஹித் மரணம் அடைந்தது தெலுங்கு பட உலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர், நடிகை அதிதிராவ் தனது டுவிட்டர் பக்கத்தில்,

அமித் புரோஹித் அன்பானவர், கடினமான உழைப்பாளி இந்த இளம் வயதில் அவர் மறைந்தது அதிர்ச்சி அளிக்கிறது அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என கூறியுள்ளார்.

நடிகர் சுதிர்பாபு,  அமித் புரோஹித் மரண செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் அவர் நட்பாக பழக கூடியவர். 

ஒவ்வொரு காட்சியிலும் கஷ்டப்பட்டு நடிப்பார் இளம் வயதில் நம்மை விட்டு சென்று விட்டார் என கூறியுள்ளார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here