எடப்பாடிக்கு மிரட்டல் விடுத்த பரோட்டா மாஸ்டர் கைது.!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைக் கடத்தப் போவதாக காவல் கட்டுப்பாட்டு அறையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்த நபர் திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

0
285

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைக் கடத்தப் போவதாக காவல் கட்டுப்பாட்டு அறையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்த நபர் திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகலில் காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணான 100-ஐ தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கடத்தப் போவதாகக் கூறிவிட்டு உடனடியாக இணைப்பைத் துண்டித்தார். 

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்த நபர் பேசிய தொலைபேசி எண்ணை ஆய்வு செய்த போது அவர் திருச்சி தில்லை நகரைச் சேர்ந்த ரகமதுல்லா (40) என தெரியவந்தது.

இது தொடர்பான தகவலின் பேரில் அவரை கைது செய்து தில்லை நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பாஸ்ட்புட் கடை ஒன்றில் புரோட்டா மாஸ்டர்  வேலை செய்து வந்த இவர், வேலையிலிருந்து நிறுத்தப்பட்டதால் மன அழுத்தம் காரணமாக முதலமைச்சரை கடத்தப்போவதாக மிரட்டல் விடுத்ததாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here