சூப்பரான திணை மாவு சப்பாத்தி.!

0
106

தேவையான பொருட்கள்

 

தினை மாவு – ஒரு கப் 

கோதுமை மாவு – ஒரு கப் 

உப்பு – தேவையான அளவு 

எண்ணெய் – தேவையான அளவு

 

செய்முறை 

 

ஒரு பாத்திரத்தில் தினை மாவை போட்டு அதனுடன் கோதுமை மாவையும் ஒன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் மூடி வைக்கவும். 

பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக  உருட்டி சப்பாத்திபோல் தேய்த்து வைக்கவும். 

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி  போட்டு சுட்டு எடுக்கவும். 

தினை மற்றும் கோதுமை மாவு சேர்ந்த சப்பாத்தி தயார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here