மெஸ்ஸியா, ரொனால்டோவா சிறந்தவர்?? கோலி பதில்

ரொனால்டோ அதிக சவால்களை எதிர்கொண்டு அவை அனைத்திலும் வெற்றியும் பெற்றிருக்கிறார். 

0
134

தீவிர கால்பந்து ரசிகரான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, போர்த்துகீசிய நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மெஸ்ஸியை விட சிறந்தவர் என்றும் அவர் தனக்கு உத்வேகம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இணையதளம் ஒன்றிக்கு பேட்டியளித்த கோலியிடம் மெஸ்ஸி – ரொனால்டோ இருவரில் சிறந்தவர் யார்? என்ற கேள்வியெழுப்பப்பட்டது

அதற்கு என்னைப் பொறுத்தவரை, கிறிஸ்டியானோ எல்லோரை விடவும் சிறந்த வீரர் ஆவார்.  

ரொனால்டோ அதிக சவால்களை எதிர்கொண்டு அவை அனைத்திலும் வெற்றியும் பெற்றிருக்கிறார். 

அவரது அர்ப்பணிப்பு மற்றும் பணி நெறிமுறைகள் யாரோடும் ஒப்பிடமுடியாதவை, அவர் அதை மிகவும் விரும்பி செய்கிறார். 

அதை நீங்கள் ஒவ்வொரு ஆட்டத்திலும் நீங்கள் காணலாம் அவர் விளையாடும் ஒவ்வொரு கிளப்பையும் நான் ஆதரிக்கிறேன், அவர் என்னை ஊக்கப்படுத்துகிறார் என்று கோலி கூறினார்.

இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரியின் முயற்சியைப் பாராட்டிய கோலி, கூறியதாவது,

கால்பந்து உலகக் கோப்பைக்கு இந்தியா தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறினார்.

நாம் வெகு தொலைவில் இல்லை, கடந்த மூன்று நான்கு ஆண்டுகளில் எங்கள் கால்பந்தில் நாங்கள் வெகுவாக முன்னேறியுள்ளோம். 

வித்தியாசத்தை ஏற்படுத்த புதிய திறமைகள் வருவதோடு எங்கள் கேப்டன் சுனில் சேத்ரி அற்புதமான அமைதியுடனும் உத்வேகத்துடனும் அணியை வழிநடத்துகிறார் .

யாராவது உலகக் கோப்பையில் விளையாட தகுதியானவர்களாக இருந்தால் அது சுனில் சேத்ரி தான்.

இந்திய அணி அவரின் உந்துதலுக்குப் பின்னால் அணிதிரண்டு உலகக் கோப்பைக்கு தகுதி பெற வேண்டும் அதை அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும்.

அவர் ஒரு முழுமையான சாம்பியன் மற்றும் உத்வேகம் தரும் மனிதர் என்று கோலி கூறினார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here