கணிணி முன் அதிக நேரம் வேலை பார்ப்பவர்களுக்கான டிப்ஸ்.!

கணினித் திரையை அதிக நேரம் பார்ப்பவர்கள், கண்களை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். 

0
74

கணினித் திரையை அதிக நேரம் பார்ப்பவர்கள், கண்களை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். 

15 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்களுக்குச் சிறிது நேரம் ஓய்வு கொடுப்பது நல்லது. 

அதற்கு சாத்தியமில்லாதவர்கள் உள்ளங்கைகளால் கண்களை மென்மையாக மூடி அதிலிருந்து வரும் இளஞ்சூடு மூலம் இரண்டு நிமிடங்கள் ஓய்வு கொடுக்கலாம், கண்கள் பாதிக்கப்படாதபடி  இது ஓரளவு காப்பாற்றும்.

பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை கைகளையும் உடலையும் நீட்டி, மடக்கி கொஞ்சம் உடற்பயிற்சி செய்யலாம். 

கனினியில் தட்டச்சு செய்யும்போது உடலை நேர்க்கோட்டில் வைத்திருப்பது அவசியம். 

அப்போது முதுகுத்தண்டு நேராக இருக்கும். இப்படிச் செய்வதால் உடல்  வலியைக் குறைக்கலாம்.

தட்டச்சு செய்யும்போது முழங்கைகளை இடையின் பக்கத்தில் வைத்திருப்பது கைகளுக்கு ஆதரவாக இருக்கும், தோள்பட்டை வலியும்  குறையும்.

தொடர்ந்து எட்டு அல்லது பத்து மணி உட்காருவதால் முதுகு வலி அதிகம் ஏற்படுகிறது. 

உடலில் எந்த அசைவும் இன்றி ஒரே இடத்தில் பல மணி நேரம் உட்காருவதால் தசைகள் மறுத்து முதுகு வலி ஏற்படுகிறது. 

ஆகவே ஒரே இடத்தில் உட்காராமல் உடலுக்கு அசைவு கொடுக்க  முதுகு வலியை தவிர்க்கலாம்.

தொடர்ந்து ஒரே இடத்தில் உட்காருவதால் இன்சுலின் பெரும்பாலும் குறைந்து நீரிழிவு பிரச்சனை ஏற்படுகிறது. 

எனவே இதனை தவிர்த்து  சிறிது நேரத்திற்கு ஒரு முறை உடலுக்கு அசைவு கொடுக்கலாம்.

சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்படும், ஒரே இடத்தில் உட்காருவதால் ஜீரண சக்தி குறைந்து அஜீரணக் தண்மை எற்படும். 

அதிக நேரம் கணினியை உற்று நோக்கும் போது கண்களில் நீர் வடிதல், கண் எரிச்சல் ஆகிய பிரச்னைகளும் ஏற்படும். 

இதற்கு 1 மணி நேரத்திற்கு ஒரு  முறை கைகளை கண்களால் மூடி ஓய்வு கொடுக்கலாம், மற்றும் அடிக்கடி கண்களை சிமிட்டலாம்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here