அமெரிக்காவில் ஆடியது நல்ல அனுபவம்.!

இந்திய அணி தரப்பில் குருணல் பாண்ட்யா 2 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார், வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 

0
144

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடெர்ஹில்லில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

முதலில் ஆடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது, அதிகபட்சமாக ரோகித் சர்மா 67 ரன்கள் சேர்த்தார். 

குருணல் பாண்ட்யா 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார், பின்னர் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 15.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 

டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றிக்கு 15.3 ஓவர்களில் 121 ரன்கள் தேவையாக இருந்தது. 

இதனால் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

இந்திய அணி தரப்பில் குருணல் பாண்ட்யா 2 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார், வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 

இந்திய அணி வீரர் குருணல் பாண்ட்யா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்நிலையில், ஆட்டநாயகன் விருது பெற்ற குருணல் பாண்ட்யா அளித்த பேட்டியில்,

நான் பந்து வீசிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது, ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சற்று அனுகூலமாக இருந்தது. 

அமெரிக்காவில் ஆடியது நல்ல அனுபவமாகும், இந்த போட்டியின் மூலம் எனது நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது. 

வேகப்பந்து வீச்சாளர்கள் முதலில் விக்கெட் வீழ்த்துவது எங்களது பணியை எளிதாக்கும். 

அணியில் எல்லா வீரர்களும் நல்ல பங்களிப்பை அளித்தனர், ஒட்டுமொத்தத்தில் அணி சிறப்பாக செயல்பட்டது என தெரிவித்துள்ளார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here