2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பேச்சுவார்த்தை.!

லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் 2028 விளையாட்டுகளின் பட்டியலில் கிரிக்கெட்டும் சேர்க்கப்படலாம் என சர்வதேச கிரிக்கெட் கமிட்டி தலைவர் மைக் கேட்டிங் கூறியுள்ளார்.

0
43

லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் 2028 விளையாட்டுகளின் பட்டியலில் கிரிக்கெட்டும் சேர்க்கப்படலாம் என சர்வதேச கிரிக்கெட் கமிட்டி தலைவர் மைக் கேட்டிங் கூறியுள்ளார்.

நாங்கள் ஐ.சி.சி தலைமை நிர்வாகி மனு சாவ்னியுடன் பேசியதில், அவர் 2028-ல் நடைபெற இருக்கும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க முடியும் என்று நம்புவதாக கூறியுள்ளார் என கேடிங் கூறியுள்ளார்.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பது குறித்து ஐ.சி.சி நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருப்பதாகவும், இது உலகெங்கிலும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோசத்தை தரும். 

இது இரண்டு வாரங்களே நடக்கவிருப்பதால் முதல் முறை திட்டமிட்டு விட்டால், இதை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை திட்டமிடுவது எளிமையாக இருக்கும்.

அடுத்த 18 மாதங்களில் அதை எப்படி செய்வது என்று திட்டமிடுவது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். 

பி.சி.சி.ஐ, தேசிய  ஊக்கமருந்து தடுப்பு அமைப்புடன் இணைந்து செயல்படுவது இதுவே முதல் முறை. 

கிரிக்கெட் விளையாட்டு நீடித்து இருக்க ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட வேண்டும், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விளையாட அனைத்து நாடுகளும் இணங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here