யாழ்.நல்லூர் ஆலய வளாகத்தில் மூன்று முஸ்லீம் இளைஞர்கள் கைது.!

சந்தேகத்தின் பேரில் குறித்த மூன்று முஸ்லிம் இளைஞர்களையும் கைது செய்ததாக யாழ்ப்பாண பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

0
130

யாழ்ப்பாணம்  நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று முஸ்லீம் இளைஞர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில்,

நேற்று இரவு 10 மணி அளவில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று முஸ்லிம் இளைஞர்கள் யாழ்ப்பாண பொலிசாரினால் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். 

குறித்த மூன்று முஸ்லிம் இளைஞர்களும் நேற்று இரவு 10 மணி அளவில் ஆலய வளாகத்துக்குள் நடமாடியதனால்,

சந்தேகத்தின் பேரில் குறித்த மூன்று முஸ்லிம் இளைஞர்களையும் கைது செய்ததாக யாழ்ப்பாண பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மூன்று முஸ்லிம் இளைஞர்களும் கிளிநொச்சி மற்றும் முழங்காவில்  பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும்,

அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here