சக வீராங்கனையை திருமணம் செய்த நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் கர்ப்பம்??

சக வீராங்கனையை திருமணம் செய்த நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் சட்டர்த்வெய்ட் கர்ப்பம் ஆகியுள்ளார்.

0
366

சக வீராங்கனையை திருமணம் செய்த நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் சட்டர்த்வெய்ட் கர்ப்பம் ஆகியுள்ளார்.

நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் அமெ சட்டர்த்வெய்ட், நியூசிலாந்து அணிக்காக 12 ஆண்டுகளாக விளையாடி வரும் 32 வயதான சட்டர்த்வெய்ட்,

119 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 6 சதம், 21 அரை சதங்கள் உட்பட 3,821 ரன்களும், 20 ஓவர் கிரிக்கெட்டில் 99 ஆட்டங்களில் ஆடி 1,526 ரன்களும் சேர்த்துள்ளார். 

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 சதங்கள் விளாசிய ஒரே வீராங்கனை இவர் தான்.

தன்பாலின ஈர்ப்பு கொண்ட சட்டர்த்வெய்ட், அணியின் சக வீராங்கனையும், வேகப்பந்து வீச்சாளருமான 28 வயதான லியா தாஹூஹூவுடன் நெருங்கிப்பழகினார். 

ஒன்றாக வசித்து வந்த இவர்கள் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இந் நிலையில் சட்டர்த்வெய்ட், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் இந்த மகிழ்ச்சியான தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வது திரிலிங்காக இருப்பதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று தெரிவித்துள்ளார். 

அடுத்த ஆண்டு ஜனவரியில் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கிறோம், எங்களது வாழ்வின் புதிய அத்தியாயத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சட்டர்த்வெய்ட் விளையாட முடியாது. 

2021-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடக்கும் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக களம் திரும்ப திட்டமிட்டுள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் மகப்பேறு விடுப்பு திட்டத்தை புதியதாக ஒப்பந்த பட்டியலில் சேர்த்துள்ளது. 

இதனால் சட்டர்த்வெய்ட் 2019-20-ம் ஆண்டு ஒப்பந்த பட்டியலில் தொடர்ந்து நீடிப்பார். 

கிரிக்கெட் விளையாடாமல் ஓய்வில் இருந்தாலும் ஒப்பந்த தொகையை அவர் முழுமையாக பெறுவார்.

நியூசிலாந்து நாட்டில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் உண்டு. 

சக வீராங்கனையை கரம்பிடித்த சட்டர்த்வெய்ட் எந்த முறையில் கர்ப்பம் ஆனார் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here