சூப்பரான கற்றாழை பாயாசம்.!

0
66

தேவையான பொருட்கள்

 

பாசிப் பருப்பு – 1 கப்

முந்திரி – 10

பாதாம் – 10

துருவிய வெல்லம் – 2 கப்

காய்ச்சிய பால் – 2 கப்

தோல் சீவி நறுக்கிய கற்றாழை – 2 

ஏலக்காய்ப் பொடி – 2 சிட்டிகை

நெய் – 3 டீஸ்பூன்

 

செய்முறை

 

முதலில் கற்றாழையில் இருக்கும் தோல்பகுதியை சீவி நன்றாக சுத்தம் செய்து பொடிதாக நறுக்கி கொள்ளவும். 

பின்பு பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரி ஆகியவற்றை நெய்விட்டு வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

பிறகு பாசி பருப்பபை ஒரு பாத்திரத்தில் போட்டு மிதமான சூட்டில் வறுத்து கொள்ளவும். 

பின்பு குக்கரில் நன்றாக குழையும் வரை வேகவைத்து மசித்து கொள்ளவும், பின்னர் அதனுடன் நன்கு காய்ச்சிய பாலை சேர்த்துக் கொள்ளவும்.

பின்பு துருவி வைத்துள்ள வெல்லத்தை சேர்த்து, வெல்லம் கரையும் வரை நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும்.

பின்னர் வெல்லம் கரைந்ததும் அவற்றில் கற்றாழையை சேர்த்து சிறிது நேரம் வரை கொதிக்க வைக்க வேண்டும். 

பிறகு வறுத்து வைத்துள்ள பாதாம், பிஸ்தா, முந்திரி மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கவும்.

சுவையான கற்றாழை பாயசம் தயார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here