முல்லைத்தீவில் கேரள கஞ்சா மீட்பு.!

மீட்கப்பட்ட கேரளா கஞ்சா மேலதிக விசாரணைக்காக முல்லைதீவு பொலிஸ் சிறப்பு படையணியிடம் ஒப்படைக்கப்பட்டது.

0
111

கடற்படை மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் சிறப்பு படையணி இணைந்து நேற்று (22) அதிகாலையில் முல்லைத்தீவு, உப்புக்குளம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது 1.460 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 

அதன்படி கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் முல்லைதீவு, உப்புக்குளம் பொலிஸ் சிறப்பு படையணி இணைந்து மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது,

சந்தேகத்திற்கு இடமான வாகனம் ஒன்றை கண்காணிக்கப்பட்டதுடன் மேலும் வாகனத்தின் உள்ளே இருந்த ஒரு பொதியைச் சோதிக்கும் போது குறித்த கேரளா கஞ்சா பொதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்புப் படையணி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயற்பாட்டின் காரணமாகக் கடத்தல்காரர்கள் கேரளா கஞ்சா பொதியைக் கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. 

மீட்கப்பட்ட கேரளா கஞ்சா மேலதிக விசாரணைக்காக முல்லைதீவு பொலிஸ் சிறப்பு படையணியிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here