அணியில் வீரர்கள் கலவை முக்கியமானது.!

பும்ராவின் பணிச்சுமையை சரியாக கவனிக்க வேண்டியது அவசியமானதாகும், இதனால் தான் உலக கோப்பை போட்டிக்கு பிறகு அவர் ஒருநாள் போட்டி எதிலும் விளையாடவில்லை. 

0
148

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு இந்திய அணி கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில் கூறுகையில்,

நாங்கள் கூட்டாக கலந்து பேசி அணிக்கு எது நல்லது என்பதை மனதில் கொண்டு தான் ஆடும் லெவன் அணியை முடிவு செய்கிறோம். 

ஆடும் லெவன் அணி குறித்து எப்பொழுதும் கருத்து இருக்க தான் செய்யும், ஆனால் அணியின் நலன் கருதியே யார் களம் இறங்குவது என்பதை முடிவு செய்கிறோம் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 

அணியில் வீரர்கள் கலவை முக்கியமானதாகும், நல்ல பகுதிநேர பவுலர் என்பதால் ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

பும்ராவின் பணிச்சுமையை சரியாக கவனிக்க வேண்டியது அவசியமானதாகும், இதனால் தான் உலக கோப்பை போட்டிக்கு பிறகு அவர் ஒருநாள் போட்டி எதிலும் விளையாடவில்லை. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் நீண்ட நாட்கள் விளையாட வேண்டியது இருக்கிறது. 

இதனால் பவுலர்களின் பணிச்சுமையை சரியாக கையாள வேண்டும், ரஹானே இரண்டு இன்னிங்சிலும் சிறப்பாக செயல்பட்டார். 

லோகேஷ் ராகுல், ஹனுமா விஹாரி ஆகியோரும் நன்றாக ஆடினார்கள், இந்த போட்டியில் இரண்டு மூன்று முறை சரிவில் இருந்து மீண்டு வந்தது நல்ல அம்சமாகும்.

நான் எடுக்கும் முடிவை அணியினர் சரியாக அமல்படுத்தி வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 

முடிவை சரியாக செயல்படுத்த எல்லா வீரர்களும் நல்ல பங்களிப்பை அளிக்கின்றனர். 

அணியினரின் ஒட்டுமொத்த சிறப்பான செயல்பாடுகளே வெற்றிக்கு காரணமாகும், அடுத்த டெஸ்ட் போட்டியிலும் எங்களது தொழில்முறை ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here