பா.ஜ.க அரசு சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளது.!

காங்கிரஸ் கட்சியின் தலைமையை அச்சுறுத்தும் அரசாக பா.ஜ.க. உள்ளது.

0
181

காஷ்மீர் விவகாரத்தில் பா.ஜ.க. அரசு அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டுள்ளது, இது ஜனநாயக படுகொலை, காஷ்மீரில் இன்னும் பழைய நிலை திரும்பவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர்,

சுமூக நிலை திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை காவல்துறையினரின் முன்னிலையிலேயே உடைக்கப்பட்டிருக்கிறது, இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிலை உடைப்பின் போது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிலை உடைப்பை கண்டித்துவருகிற 3ம் திகதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம், ப.சிதம்பரத்தின் கைது அணுகுமுறை திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல்.

காங்கிரஸ் கட்சியின் தலைமையை அச்சுறுத்தும் அரசாக பா.ஜ.க. உள்ளது.

முதல்வரின் வெளிநாட்டு பயணம் தமிழக மேம்பாட்டுக்காக இருந்தால் பாராட்டுகிறேன்.

எதிர்க்கட்சியாக இருப்பதால் தி.மு.க. தலைவர் மீது விமர்சனம் வைக்கிறார் முதல்வர்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க வேண்டும் என்பது தான் மோடி அரசின் திட்டம். 

அதானி, அம்பானியின் முதலீட்டுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் நடவடிக்கை தான் காஷ்மீர் விவகாரம். 

ஜி.எஸ்டி.வரியால் தொழில்துறை பாதிக்கப்பட்டு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. 

இதனை தகுந்த ஆதாரத்துடன் வெளியிட்டதால் தான் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தியாவில் சிறு குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது. 

இதனால் விலைவாசி உயரும், போராட்டங்களின் போது மாற்று சமூகத்தினர் குறித்து தவறாக பேசுவது கண்டிக்கத்தக்கது.

லண்டனில் எனது தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வாலிபர் நாங்கள் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷம் எழுப்பினார். 

இதனால் அவர் வெளியேற்றப்பட்டார், ஆனால் இதனை சில சாதிய, மதவாத சக்திகள் அவதூறாக திரித்து கூறுகிறார்கள். 

அது குறித்து வெளியான வீடியோ தவறானதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here