தெலுங்கானா கவர்னராக தமிழிசை நியமனம்.!

தமிழக பாரதீய ஜனதா தலைவராக பதவி வகித்து வந்தவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்.

0
188

தமிழக பாரதீய ஜனதா தலைவராக பதவி வகித்து வந்தவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்.

இவர் கடந்த 2014-ம் ஆண்டு இந்த பதவியில் நியமிக்கப்பட்டார், தமிழிசை சவுந்தரராஜனின் 4 ஆண்டு பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து அவர் மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டார். 

இரண்டாவது முறையாக தலைவராக நியமிக்கப்பட்ட அவரது பதவி காலம் வருகிற டிசம்பர் மாதத்துடன் முடிவடைய இருக்கிறது.

இந் நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார்.

தெலுங்கானா கவர்னராக இருந்து வந்த இ.எஸ்.எல்.நரசிம்மனின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து,

அந்த மாநிலத்தின் புதிய கவர்னராக தமிழிசை சவுந்தரராஜனை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here