தமிழரசு கட்சியின் வவுனியா இளைஞர் அணியினருக்கிடையில் மோதல்.!

தமிழரசு கட்சியின் வவுனியா இளைஞரணி உறுப்பினர்கள் இருவர் தங்களுக்குள் முட்டிமோதிக்கொண்ட  சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

0
98

தமிழரசு கட்சியின் வவுனியா இளைஞரணி உறுப்பினர்கள் இருவர் தங்களுக்குள் முட்டிமோதிக்கொண்ட  சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், 

தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞரணி முக்கியஸ்தர் ஒருவரும், இளைஞரணியின் உறுப்பினர் ஒருவரும் தொலைபேசி வாயிலாக முரண்பட்டு கொண்டனர்.

தொலைபேசியில் முரண்பாடு முற்றிய நிலையில் வவுனியா தமிழரசுகட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்திற்கு முன்பாக சந்தித்து கொண்ட இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையில் ஈடுபட்டுள்ளனர். 

குறித்த மோதல் சம்பவத்தின் போது  தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும் முன்னாள் மாகாண அமைச்சருமான ப.சத்தியலிங்கம் உடனிருந்ததுடன்,

அவரது வாகனத்தில் வருகை தந்திருந்த  இளைஞரணியின் முக்கியஷ்தர் வாகனத்தில் இருந்து இறங்கி கீழே வந்த போதே மற்றைய உறுப்பினரால் தாக்குதல் மேற்கொள்ளபட்டு மோதலாக உருவெடுத்துள்ளது. 

பின்னர் இருவரையும் சமாதானம் செய்த ப.சத்தியலிங்கம் அவர்களை அலுவலகத்திற்குள் கூட்டிசென்றார்.

குறித்த சம்பவத்தின் பின்னர் கட்சியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்கள் கட்சியின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு குறித்த சம்பவம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here