குடும்பத்தார் ஐவரை சுட்டுக் கொன்ற 14 வயது சிறுவன்.!

அமெரிக்காவின் அலபாமா மாகாணம் எல்க்மொண்டில் என்ற இடத்தில் ஒரு வீட்டில் சிறுவன் துப்பாக்கியால் சுட்டத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

0
120

அமெரிக்காவின் அலபாமா மாகாணம் எல்க்மொண்டில் என்ற இடத்தில் ஒரு வீட்டில் சிறுவன் துப்பாக்கியால் சுட்டத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும் 2 பேர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

போலீசை தொலைபேசி மூலம் சிறுவன் தொடர்பு கொண்டு வீட்டில் தனது குடும்பத்தினர் 5 பேரையும் சுட்டுவிட்டேன் என்று கூறியதாக அலபாமா போலீஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. 

மேலும் குடும்பத்தினரை சுட்டுவிட்டு கைத்துப்பாக்கியை சிறுவன் அருகில் தூக்கி எறிந்ததாகவும் அதை தேடும் பணியில் சிறுவன் தற்போது உதவி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

சிறுவன் எதற்காக கொலை செய்தான் என்ற தகவல் தெரியவில்லை.

வக்கீல் குழுவான கிபோர்ட்ஸ் சட்டமையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையால் ஆண்டுக்கு 36 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகவும்,

அதில் மூன்றில் ஒரு பங்கு படுகொலைகள் என்றும் கூறப்படுகிறது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here