நடிகை ஏமி ஜாக்சனுக்கு வளைகாப்பு.!

மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன், அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.  

0
160

மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன், அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.  

லண்டனை சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.

மீண்டும் லண்டன் பறந்த அவர் அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்தார். 

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் எமி அறிவித்தார். 

அதனை தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

குழந்தை பிறந்த பின்னர் அவர்களது திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

பிரசவ நாட்களுக்காக காத்திருக்கும் எமி ஜாக்சனுக்கு வளைகாப்பு நடந்துள்ளது, அதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

மேற்கத்திய முறைப்படி நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி முற்றிலும் பேஸ்டல் நீல நிறத்திலான தீமில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 

மிட்டாய்கள், பூக்கள், குக்கீஸ் என எல்லாமே போஸ்டல் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 

அதற்கு ஏற்ப எமியும் பேஸ்டல் நிற கவுன் அணிந்திருந்தார், இதனால் அவரின் வயிறு அழகான தோற்றத்தை அளித்தது. 

எப்போதும் மாடல் என்ற மிடுக்குடன் தோன்றும் எமி வளைகாப்பு நிகழ்ச்சியில் தாய்மைக்கே உரிய தோற்றத்தில் பிரதிபலித்தார்.  

எமி ஜாக்சன் அளித்த பேட்டியில் தன் ஆண் குழந்தைக்கு ஆண்ட்ரிஸ் என்று பெயர் சூட்டப்போகிறோம் என்பதை அறிவித்துள்ளார். 

இந்த பெயர் தேர்வுக்கான காரணம் கேட்டபோது, அது தனது பாய் பிரண்ட் ஜார்ஜின் கலாச்சாரம் என்றும் அந்த தலைமுறையின் முதல் குழந்தைக்கு கொள்ளு தாத்தாவின் பெயர்தான் வைப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here