பிள்ளையார் ஆலயத்தை புனரமைக்க நிதியுதவி.!

சிவன் அறக்கட்டளையின் ஸ்தாபகரும் மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய கணேஸ்வரன் வேலாயுதம் நாற்பது ஆயிரம் ரூபா நிதி உதவி வழங்கியுள்ளார். 

0
137

அனுராதபுரம் சிறைசாலையில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தினை புனரமைக்க சிவன் அறக்கட்டளையின் ஸ்தாபகரும் மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய கணேஸ்வரன் வேலாயுதம் நிதி உதவி வழங்கியுள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக சிவன் அறக்கட்டளையின் ஸ்தாபகரும் மக்கள் முன்னேற்றக்  கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய கணேஸ்வரன் வேலாயுதம் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் சென்றிருந்தார். 

இதன்போது அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு தேவையான பொருட்களை அவர்களிடம் வழங்கி வைத்து அவர்களுடன்  கலந்துரையாடியிருந்தார். 

இதன் போது சிறைச்சாலையில் உள்ள பிள்ளையார் ஆலயத்தை புனரமைப்பு செய்து தரும்படி அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்த நிலையில்,

சிவன் அறக்கட்டளையின் ஸ்தாபகரும் மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய கணேஸ்வரன் வேலாயுதம் நாற்பது ஆயிரம் ரூபா நிதி உதவி வழங்கியுள்ளார். 

இதன்போது சிவன் அறக்கட்டளை இணைப்பாளரும் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினருமான க.சதீஸ் அவர்களும் உடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here