பாடசாலைக்கு அருகிலுள்ள புகையிரதக்கடவையை பாதுகாப்பானதாக அமைக்க கோரிக்கை.!

0
100

வவுனியா தாண்டிக்குளம் புகையிரத நிலையம் வவுனியா பிரமண்டு மகாவித்தியாலயம் அமைந்துள்ள பகுதியில் பிரதான கண்டி வீதியைக்கடக்கும் குறித்த புகையிரதப்பாதைக்கு பாதுகாப்புக்கடவைகள் அமைக்கப்படவில்லை.

இதனால் பாடசாலை செல்லும் மாணவர்கள் உட்பட வீதியைக் கடந்து செல்லும்  பயணிகள் பலர் அச்ச நிலை ஏற்பட்டடுள்ளதுடன் ஆபத்தான பயணத்தையும் எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். 

தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள குறித்த பாதுகாப்பற்ற கடவை தன்னியக்க இயந்திரத்தினுடாக சத்தம் எழுப்பி வருகின்றதே தவிர தடைகள் அமைக்கப்படவில்லை. 

இதனால் சில வேளைகளில் கடுகதி புகையிரதம் வரும் சத்தம் கூட கேட்பதில்லை இவ்வாறு பல விபத்துக்கள் அக்கடவைகள் தடுக்கப்பட்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதுடன்,

கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பாக முச்சக்கரவண்டி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

பிரதான கண்டி வீதியைக்கடந்து இப்புகையிரத பாதுகாப்பற்ற கடவையினால் குருமன்காடு, காளி கோவில், மன்னார் வீதி, புதுக்குளம் போன்ற பல பகுதிகளுக்கு நாளாந்தம் பலர் செல்வதுடன் பேருந்துச் சேவைகளும் இதனூடாக இடம்பெறுகின்றது. 

தற்போது பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள் இப்பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் ஆபத்தான பயணங்களை எதிர்கொண்டுள்ளதாகவும்,

இதற்கு பாதுகாப்பு வேலி அமைப்பதுடன் புகையிரதக்கடவைக்காப்பாளர் ஒருவரையும் நியமிக்குமாறும்,

முன்னர் மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் இவ்விடயங்கள் ஆராயப்பட்டு வந்த நிலையிலும் அப்போதிருந்த அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுப்பதாகவும் மகஜர் கொடுக்கச் சென்ற அமைப்பினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக ஊழியர் ஒருவர் முன்பு கடமையிலிருந்துள்ளார் ஆனால் தற்போது அங்கு பாதுகாப்புக்கடமைகளில் எவரும் இல்லை. 

எனவே தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகில் காணப்படும் இக்கடவைக்கு, தானியங்கி கடவை அல்லது சாதாரண கடவையாவது போட்டு தர வேண்டும் எனவும்,

இப்பகுதியில் விபத்துக்கள் இடம்பெறுவதற்கு முன்னர் நடவடிக்கை எடுத்து உயிர்களைப்பாதுகாப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறும், இலங்கை புகையிரத திணைக்களத்திடம் மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here