வவுனியாவில் ஒரே இரவில் திருடர்கள் கைவரிசை.!

வவுனியாவில் ஒரே இரவில் மூன்று மோட்டார் சைக்கிள்களை திருடிய சம்பவம் நேற்றையதினம் (02.09) இரவு இடம் பெற்றுள்ளது.

0
159

வவுனியாவில் ஒரே இரவில் மூன்று மோட்டார் சைக்கிள்களை திருடிய சம்பவம் நேற்றையதினம் (02.09) இரவு இடம் பெற்றுள்ளது.

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும், சமணங்குளம் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளும், சிதம்பரநகர் பகுதியில் ஒரு துவிச்சக்கரவண்டியும் திருடர்களால் களவாடப்பட்டுள்ளது.

சிதம்பரபுரம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இரு வேறு வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர்கள் மோட்டார் சைக்கிளின் திறப்புகள் இல்லாத நிலையில் மோட்டார் வண்டிகளை சேதப்படுத்தி குளத்து வெளியில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சமணங்குளம் பகுதியில் ஆசிரியை ஒருவரின் மோட்டார் வண்டியானது திறப்புடன் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவ்வண்டியானது திருடர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

மேலும் சிதம்பரநகர் பகுதியில் துவிச்சக்கரவண்டியொன்றும் திருடப்பட்டுள்ளது.

இத் தொடர் திருட்டுச்சம்பவம் குறித்து சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here