மேடையில் பாடும் போது பாடகிக்கு ஏற்பட்ட பரிதாபம்.!

ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டில் சூப்பர் ஹாலிவுட் என்ற இசைக்குழுவின் சார்பில் இசைக்கச்சேரி நடந்தது. 

0
122

ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டில் சூப்பர் ஹாலிவுட் என்ற இசைக்குழுவின் சார்பில் இசைக்கச்சேரி நடந்தது. 

ஸ்பெயினை சேர்ந்த பிரபல பாப் பாடகி ஜோனா செய்ன்ஸ் இந்த கச்சேரியில் கலந்து கொண்டு பாடல் பாடினார். 

அப்போது ஆடல், பாடலின் இடையே அவ்வப்போது மேடையில் வெடிகளை வெடிக்க செய்யும் பைரோடெக்னிக் என்ற எந்திரம் திடீரென வெடித்தது. 

இதில் அதன் அருகே நின்று பாடிக்கொண்டிருந்த ஜோனா செய்ன்ஸ் காயம் அடைந்து சுருண்டு விழுந்தார்.

இதையடுத்து உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

பாடகி ஜோனா செய்ன்ஸ் மேடையில் பாடிக்கொண்டிருந்தபோதே உயிர் இழந்த சம்பவம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here