கீழடியில் கிடைக்கும் மனித எலும்புகளை டிஎன்ஏ சோதனை செய்ய முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்.!

0
176

தமிழ்நாட்டின் கீழடி, கோந்தகை மற்றும் ஆதிச்சனல்லூர் தளங்களில் இருந்து தோண்டி எடுக்கபடும் பண்டைய கால மனித எலும்புகளை டிஎன்ஏ சோதனை நடத்துவது என தமிழக தொல்பொருள் துறை, மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்டு மருத்துவப் பள்ளி ஆகியவை இணைந்து முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

தொல்பொருள் துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் டி.உதயச்சந்திரன் கூறுகையில்,

ஆய்வை மேற்கொள்ள தொல்பொருள் துறை, மதுரை காமராஜ் பலகலைக்கழகம் மற்றும் ஹார்வர்டு பள்ளியின் டேவிட் ரீச் ஆய்வகம் ஆகியவை இணைந்து முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.

எங்கள் எதிர்கால அகழ்வாராய்ச்சிகளில் கொந்தகை, கீழடி மற்றும் ஆதிச்சனல்லூர் ஆகிய இடங்களில் அதிகமான பண்டைகால மனித எலும்புகளைக் கண்டுபிடிப்போம் என்று நம்புகிறோம். 

இந்த மாதிரிகள்  டி.என்.ஏ ஆய்வுக்கு அனுப்பப்படும், தமிழ்நாட்டில் தோண்டப்பட்ட  மனித எலும்புகளில் என்ன வகையான மரபணு இருந்தது என்பதை இது முக்கியமாக வெளிப்படுத்தும் என கூறினார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here