120 விசைப்படகுகள் கரையோர நங்கூரமிட்டு தொடர் வேலை நிறுத்த போராட்டம்.!

பாம்பன் பகுதியில் சுமார் 120  விசைப்படகில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 

0
69

பாம்பன் பகுதியில் சுமார் 120  விசைப்படகில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 

இவர்களுக்கு மாதந்தோறும் 1500 லீற்றர் டீசல் மானியமாக  வழங்கப்படுவது வழக்கம்.  

இந்நிலையில் இரும்புப் படகு வைத்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 50 விசைப்படகுகளுக்கு கடந்த சில மாதங்களாகவே மீன்வளத்துறை அதிகாரிகள் மானிய டீசல் வழங்கவில்லை என்ற ஒரு புகார் எழுந்துள்ளது. 

இதுதொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் பல முறை மாவட்ட ஆட்சியரை சந்தித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால்,

ஆத்திரமடைந்த மீனவர்கள் 120 விசைப்படகுகளை கரையோர நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த போராட்டம் காரணமாக நேரடியாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும் மறைமுகமாக  50000க்கும் மேற்பட்ட மீனவர்களும் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 3 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

மேலும்  மீன்வளத்துறை அதிகாரிகள்  அனைத்து மீனவர்களுக்கும் மானிய டீசல் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்  

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here