லண்டன் செல்கிறார் பும்ரா.!

இந்தியா- தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. 

0
51

இந்தியா- தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. 

இதில் முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளார். 

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா விலகியதால், அவருக்குப் பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பும்ராவின் காயம் குணமடையும் வரை பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் கண்காணிப்பில் அவர் இருப்பார், பிசிசிஐ மருத்துவ குழு அவரது காயத்தை கண்காணிக்கும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பும்ரா சிகிச்சைக்காக லண்டன் செல்ல உள்ளார், அவருடன் இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பிசியோதெரபிஸ்ட் ஆஷிஷ் கவுசிக்கும் செல்கிறார். 

லண்டனில் உள்ள 3 சிறப்பு நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு அதன்படி சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here