இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்கும் உணவுகள்.!

நமது உடலில் உள்ள இரத்தம் சுத்தமாகவும், இரத்தத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை விகிதம் சரியானதாகவும் இருந்தால் தான் உடல் நோயின்றி வாழ முடியும்.

0
36

நமது உடலில் உள்ள இரத்தம் சுத்தமாகவும், இரத்தத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை விகிதம் சரியானதாகவும் இருந்தால் தான் உடல் நோயின்றி வாழ முடியும்.

இரத்தம் சுத்தமாக இல்லாமல் இருந்தால் பல நோய்கள் வர அதுவே காரணமாகிவிடும். 

உடல் அசதி, காய்ச்சல், சுவாச கோளாறு, வயிற்று பொருமல் போன்றவை உண்டாகலாம்.

இரத்தம் சுத்தமாக வைத்து கொள்ள முருங்கை கீரை, மணத்தக்காளி கீரை, பொன்னாங்கண்ணி கீரை, வாழைப்பூ, நாவல் பழம், உலர்ந்த  திராட்சை, முளைகட்டிய தானியங்கள் ஆகியவை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.

புளிச்சக்கீரையை துவையலாக செய்து சாப்பிட்டு வர இரத்தத்தை சுத்தப்படுத்தி அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும்.

இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் உண்டாகும், நாவல் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். 

இஞ்சியை நன்றாக இடித்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர இரத்தத்தை சுத்தமாக்கும்.

இலந்தை பழம் சாப்பிட்டு வர இரத்தத்தை சுத்தப்படுத்தும், பூண்டு இரத்த ஓட்டத்தை சீராக்கி உடலுக்கு புத்துணர்வை கொடுக்கிறது, இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here