காஷ்மீர் பிரச்சினை பற்றி சீனா கருத்து.!

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று சீனாவுக்கு சென்றார். 

0
35

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று சீனாவுக்கு சென்றார். 

இந்நிலையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கெங் சுவாங் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர் கூறுகையில்,

இந்தியாவும், சீனாவும் மேல்மட்டத்தில் தொடர்பு வைத்துக்கொள்ளும் பாரம்பரியம் கொண்ட நாடுகள். 

உயர்மட்டத்தில் தகவல் பரிமாற்றம் நடந்து வருகிறது, இரு நாடுகளும் வளர்ந்து வரும் பெரிய நாடுகள், இருதரப்பு உறவு நல்லமுறையில் வளர்ச்சி கண்டுள்ளது.

கா‌‌ஷ்மீர் பிரச்சினை பற்றிய எங்கள் நிலைப்பாடு தெளிவானது, அதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் இருதரப்பு ரீதியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும், அதுதான் இரு நாடுகளுக்கும் நல்லது என அவர் கூறியுள்ளார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here