காணி உரிமம் தொடர்பாக புதிய வேலர் சின்னக்குளம் மக்களுடன் கலந்துரையாடல்.!

வவுனியா புதியவேலர் சின்னக்குளம் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு அவர்களது காணிக்கான உரிமங்கள் இல்லாமை தொடர்பாகவும், அதனை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது தொடர்பாகவும் உண்மை மற்றும் நல்லிணக்க மன்றம் கலந்துரையாடியுள்ளது.

0
16

வவுனியா புதியவேலர் சின்னக்குளம் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு அவர்களது காணிக்கான உரிமங்கள் இல்லாமை தொடர்பாகவும்,

அதனை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது தொடர்பாகவும் உண்மை மற்றும் நல்லிணக்க மன்றம் கலந்துரையாடியுள்ளது.

1972 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து குறித்த கிராமத்தில் வசித்து வரும் மக்கள் தாம் வாழும் காணிக்கான உரிமம் இன்மையினால் எவ்வித அபிவிருத்தி பணிகளையும் தாம் வாழும் காணிகளுக்குளம் மேற்கொள்ள முடியாத நிலையில் வாழ்கின்றனர்.

எனினும் அண்மையில் அவர்களுக்கான வீட்டுத்திட்டம் வழங்கப்பட்ட நிலையில் 40 குடும்பங்கள் வீட்டுத்திட்டத்தினை பெற்று குறித்த காணிகளுக்குள் வீடுகளை அமைத்துள்ளனர்.

எனினும் காணி மத்தியவகுப்பு காணி என்ற காரணத்தினை காட்டி இங்கு வாழும் மக்களுக்கு கிடைக்க வேண்டிய காணி உரிமங்களை வழங்க அரச திணைக்களங்கள் நடவடிக்கை எடுக்க பின்னடித்து வருகின்றன.

இந் நிலையிலேயே வவுனியா மாவட்ட உண்மை மற்றும் நல்லிணக்க மன்றமானது இம் மக்களின் சகஜமான வாழ்வினையும் இக் கிராம மக்களுக்கு பின்னர் குடியேறிய கிராமங்களுக்கு காணி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில்,

இக் கிராமத்திற்கு வழங்காத நிலையில் ஏனைய மக்களுடன் நல்லிணக்கத்தில் முரண்பாடுகள் ஏற்படும் என்பதனையும் கருத்தில் கொண்டு,

இம் மக்களின் காணி உரிமம் தொடர்பான விடயத்தில் கரிசனை கொண்டு குறித்த நடவடிக்கையினை மேற்கொள்டுள்ளது.

இதன் பிரகாரம் இக் கிராமத்தில் மக்கள் வாழும் காலப்பகுதிக்கான ஆதாரத்தினை திரட்டி அரச உயர் மட்டத்திற்கு குறித்த விடயத்தினை கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 

இதற்கான முதற்கட்ட செயற்பாடாக அக் கிராமத்தவர்களுடனான் கலந்துரையாடல் இன்று குறித்த கிராமத்தில் இடம்பெற்றிருந்து.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here