கோத்தபாயவை ஆதரித்து, ஈழவர் ஜனநாயக முன்னணி பிரச்சாரம்.!

ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) அமைப்பினர் எதிர்வரும் எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கோட்டாபே ராஜபக்சவை ஆதரித்து, இன்றைய தினம் தமது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.

0
253

ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) அமைப்பினர் எதிர்வரும் எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கோட்டாபே ராஜபக்சவை ஆதரித்து, இன்றைய தினம் தமது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதன் முதல் கட்டமாக வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பிரதேசங்களில்  ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர் மூலம் இவ் பிரச்சாரத்தை முன்னேடுத்துள்ளனர்.

இதன் ஆரம்ப நிகழ்வு இன்று காலை 8 மணியளவில் வவுனியா ஈரோஸ் அமைப்பின் தலைமை காரியாலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு வவுனியா நகர் பகுதி வரை இவ்பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தொலைத்த இடத்தில் தேடுவோம் என்ற தொனிப்பொருளிலும் எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் ஈரோஸ் அமைப்பின் நிலைப்பாட்டை விளக்கும் துண்டு பிரசுரம் ஒன்றும் வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here