கைதி படம் எப்படி?? கார்த்தி கருத்து.!

கார்த்தி நடித்துள்ள கைதி படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது, இது கதாநாயகி, பாடல் இல்லாத படமாக தயாராகியுள்ளது.

0
38

கார்த்தி நடித்துள்ள கைதி படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது, இது கதாநாயகி, பாடல் இல்லாத படமாக தயாராகியுள்ளது.

கைதி  படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது, இதில் கார்த்தி பேசுகையில்,

எனக்கு நல்ல கதைகள் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் உண்டு. 

அப்படித்தான் மெட்ராஸ், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்கள் அமைந்தன, மெட்ராஸ் படம் ஒரு சுவரை வைத்து எடுக்கப்பட்டது. 

ஹாலிவுட்டில் முழு நீள சண்டை படங்கள் அதிகம் வந்துள்ளன, அதுபோன்ற ஒரு முயற்சியாக கைதி படம் தயாராகி உள்ளது. 

இந்த படத்தில் 10 வருடம் ஜெயிலில் இருந்து வெளியே வரும் கைதியாக நடித்து இருக்கிறேன். 

எனது கதாபாத்திரத்தை வித்தியாசமாக வடிவமைத்து உள்ளனர், இது ஒரு இரவில் நடக்கும் கதை. 

நிறைய சவால்கள் இந்த படத்தில் இருந்தன, படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும், படப்பிடிப்பில் எல்லோரும் கஷ்டப்பட்டனர். 

எனக்கு  அதிரடி சண்டை படங்கள்  பிடிக்கும், கைதி முழுமையான சண்டை படமாக தயாராகி உள்ளது, கதை மற்றும் காட்சி அமைப்புகள் நேர்த்தியாக இருக்கும் என கார்த்தி கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here