கர்ப்ப காலத்தில் பச்சை குத்திக் கொள்வது நல்லதா??

சிலருக்கு கருவுற்ற காலத்தில் பச்சைக்குத்திக்கொள்ளலாமா என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

0
53

சிலருக்கு கருவுற்ற காலத்தில் பச்சைக்குத்திக்கொள்ளலாமா என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

கர்ப்ப காலத்தில் எதெல்லாம் செய்யலாம் செய்யக் கூடாது என்பதை மருத்துவர்களின் அறிவுரைப்படியே செய்ய வேண்டும். 

கருவுற்ற காலத்தில் பச்சைக் குத்திக்கொள்ள ஆசை வருகிறது அல்லது புதிய டிசைன்களைப் பார்த்ததும் குத்திக்கொள்ள ஆசை தோன்றுகிறது.

மற்றவர்களைப் பார்த்ததும் தானும் பச்சைக் குத்திக்கொள்ள எண்ணம் தோன்றுகிறது இப்படி எந்த வகையிலும் ஆசை உதிர்க்கலாம். 

ஆனால் குழந்தையின் நலன் கருதிபொதுவாக பச்சைக் குத்திக்கொள்ளும் போது சில முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளச் சொல்வார்கள். 

அந்த முன்னெச்சரிக்கைகள் கர்ப்பிணிகளுக்கு ஏற்புடையதாக இருக்காது, குறிப்பாக கர்ப்பம் தரிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் கட்டாயம் அந்த நாட்களில் பச்சைக் குத்திக்கொள்ளக் கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள்.

பச்சைக்குத்தப் பயன்படுத்தப்படும் சாயத்தில் மெர்க்குரி, அர்செனிக் போன்ற கடுமையான விளைவுகளை உண்டாக்கக் கூடிய உலோகக் கலவைகள் பயன்படுத்தப்படுகிறது. 

சாதாரணமான நாட்களில் எந்த பக்கவிளைவுகளையும் பொருத்துக்கொள்ளலாம், ஆனால் கர்பகாலத்தில் உள்ளே இருக்கும் குழந்தையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதேபோல் பச்சைக்குத்தப் பயன்படுத்தப்படும் ஊசி கடுமையான வலியை ஏற்படுத்தும். 

அதனால் நீங்கள் கத்துவதோ, வலியை தாங்குவதோ உள்ளே இருக்கும் குழந்தையையும் தாக்கும். 

ஊசி சரியாக குத்தப்படவில்லை எனில் அதன் மூலம் கிருமிகள், கெமிக்கல்கள் உடலுக்குள் செலுத்தப்படலாம்.

கருவுற்ற காலத்தில் பச்சைக் குத்திக்கொள்ளலாமா என்ற கேள்விக்கு இன்றுவரை ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுக்கொண்டிருக்கின்றன. 

விடை கண்டுபிடிக்கவில்லை, அதில் இதுவரை செய்யப்பட்டதிலும் பச்சைக்குத்திக்கொள்ளக் கூடாது என்பன போன்ற எதிர்மறை ரிசல்டுகளே வந்துள்ளன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here