பாகிஸ்தானின் இரத்தத்தில் கா‌‌ஷ்மீர் கலந்துள்ளது.! முஷரப்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌‌ஷரப், அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார்.

0
37

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌‌ஷரப், அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார்.

உடல்நல குறைவு காரணமாக கடந்த ஆண்டு அவர் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தார். 

உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் மீண்டும் தீவிர அரசியலில் குதித்துள்ளார். 

2016-ம் ஆண்டில் இருந்து துபாயில் வசித்து வரும் அவர், அங்கிருந்தபடி தனது கட்சியின் தொடக்க விழாவையொட்டி தொலைபேசி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,

பாகிஸ்தானின் இரத்தத்தில் கா‌‌ஷ்மீர் கலந்துள்ளது, கா‌‌ஷ்மீரின் சகோதர, சகோதரிகளுக்கு நாம் தொடர்ந்து உறுதுணையாக இருப்போம். 

பாகிஸ்தானும், பாகிஸ்தான் இராணுவமும் தங்களது உடலின் கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரை போராடும். 

அமைதிக்காக பாகிஸ்தான் முயற்சி செய்தபோதிலும் இந்தியா தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. 

பாகிஸ்தானின் அமைதிக்கான முயற்சியை பலவீனமாக கருதக்கூடாது, இந்தியாவின் எத்தகைய தாக்குதலுக்கும் உரிய பதிலடி கொடுக்க பாகிஸ்தான் இராணுவம் தயாராகவே உள்ளது. 

கார்கில் போரை இந்தியா மறந்து விட்டது போலும், அந்த போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதியின் உதவியை இந்தியா நாடியது என அவர் கூறியுள்ளார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here