யாஷிகா மீது அவதூறு.! காரணம் என்ன??

சினிமாவில் அரைகுறை உடையில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகை யாஷிகா ஆனந்த், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார்.

0
102

சினிமாவில் அரைகுறை உடையில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகை யாஷிகா ஆனந்த், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார்.

தற்போது இவன்தான் உத்தமன், ராஜ பீமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் யாஷிகாவின் சொகுசு கார் மோதி தொழிலாளி ஒருவர் படுகாயம் அடைந்ததாகவும்,

மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

விபத்து நடந்த போது காரில் யாஷிகாவின் நண்பர்கள் இருந்தனர் என்றும் யாஷிகா இருந்தாரா? என்பது உறுதியாக தெரியவில்லை என்றும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் விபத்து குறித்து யாஷிகா விளக்கம் அளித்துள்ளார், அவர் கூறியதாவது,

விபத்து நடந்த காரில் நான் இருந்ததாக வெளியாகும் செய்திகள் பொய்யானவை, அந்த காரில் நான் செல்லவில்லை. 

எனது நண்பர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானது என்று கேள்விப்பட்டதும் நான் வேறு ஒரு காரில் விபத்து நடந்த இடத்துக்கு சென்றேன். 

இதனால் நானும் விபத்துக்குள்ளான காரில் இருந்ததாக பொய்யான தகவலை அவதூறாக பரப்பியுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here