கருட தரிசனம் செய்ய சிறந்த நாள் எது??

பெருமாளின் வாகனமாய் கருடன் இருக்கின்றது பக்தர்களின் துயரினை போக்க பகவான் விரைந்து வர பேருதவியாய் இருப்பதால் இறைவனுக்கு ஈடாய் கருடனை கருடாழ்வார் என அழைப்பர். 

0
45

பெருமாளின் வாகனமாய் கருடன் இருக்கின்றது பக்தர்களின் துயரினை போக்க பகவான் விரைந்து வர பேருதவியாய் இருப்பதால் இறைவனுக்கு ஈடாய் கருடனை கருடாழ்வார் என அழைப்பர். 

அதிகாலை சூரிய உதயத்தின்போது கருடனை தரிசித்தால், நினைத்த காரியம்  நடைபெறும்.

வியாழன் பஞ்சமியில் சுவாதி நட்சத்திரத்தில் கருட பஞ்சாங்கத்தை படிப்பது அமோக பலனை தரும், சுவாதியில் மாலை நேர கருட தரிசனம்  மிகவும் விஷேசம்.

ஞாயிறு – பிணி விலகும் 

திங்கள் – குடும்ப நலம் பெருகும் 

செவ்வாய் – துணிவு பிறக்கும் 

புதன் – பகைவர் தொல்லை நீங்கும் 

வியாழன் – நீண்ட ஆயுள் கிடைக்கும் 

வெள்ளி – திருமகள் திருவருள் கிட்டும்

சனி – முக்தி அடையலாம்

தேவலோகத்தில் இருந்து கருடன் எடுத்து வந்த அமுத கும்பத்தில் ஒட்டிய தேவப்புல்லே பூவுலகில் விழுந்து தர்ப்பை ஆனதாக புராணங்கள்  தெரிவிக்கின்றன.

கருட பெருமான் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தம் இரு கரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே கருட சேவை எனப்படும், அப்போது பெருமான், கருடன் ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே கிடப்பதைப் பக்தர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here