விஜயுடன் இணைந்த ஆன்ட்ரியா.!

விஜய் நடித்துள்ள பிகில் படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ளது, இந்நிலையில் ரசிகர் ஒருவர் பிகில் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? என்று சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பினார். 

0
114

விஜய் நடித்துள்ள பிகில் படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ளது, இந்நிலையில் ரசிகர் ஒருவர் பிகில் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? என்று சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பினார். 

இதற்கு அட்லி செஞ்சிட்டா போச்சு என்று பதில் அளித்துள்ளார், எனவே 2–ம் பாகம் தயாராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் விஜய் தற்போது அடுத்த புதிய படத்தில் நடித்து வருகிறார், இது அவருக்கு 64வது படம் ஆகும். 

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 22 நாட்கள் நடந்து முடிந்துள்ளது, அடுத்தகட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடக்கிறது. 

இதில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார், இவர் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்தவர். 

சாந்தனு, வர்கீஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள், இந்த படத்தில் ஆண்ட்ரியாவும் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கவர்ச்சியான பேராசிரியை வேடத்தில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது, வெப் தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள பிரகிதாவையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here