அனுஷ்காவுடன் காதலா?? மனந்திறந்த பிரபாஸ்.!

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் அனுஷ்காவும், பிரபாசும் ஜோடியாக நடித்திருந்தனர், அப்போதிருந்தே இருவரையும் இணைத்து பேச ஆரம்பித்தனர், அவர்கள் மறுப்பு தெரிவித்த பிறகும் ஓய்ந்தபாடில்லை. 

0
147

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் அனுஷ்காவும், பிரபாசும் ஜோடியாக நடித்திருந்தனர், அப்போதிருந்தே இருவரையும் இணைத்து பேச ஆரம்பித்தனர், அவர்கள் மறுப்பு தெரிவித்த பிறகும் ஓய்ந்தபாடில்லை. 

இந் நிலையில் அனுஷ்காவை காதலிப்பதாக பரவும் தகவலுக்கு பதில் அளித்துள்ளார் பிரபாஸ்.

அனுஷ்காவும், நானும் சில படங்களில் சேர்ந்து நடித்தோம், அப்போது எங்களுக்குள் நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டது. 

11 வருடங்களாக இந்த நட்பு நீடிக்கிறது, மற்றவர்கள் நினைப்பது போல் இது காதல் இல்லை. 

எங்களுக்குள் காதல் இருந்தால் அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை, எங்கள் இருவரில் ஒருவருக்கு திருமணம் ஆவதுவரை இந்த வதந்திகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். 

அனுஷ்காவை பொறுத்தவரை அழகானவர், பாகுபலி படத்தில் தேவசேனா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து இருந்தார். 

எங்கள் இருவரையும் சினிமாவில் ஒரு ஜோடியாகவே பார்த்தனர், எங்களுக்குள் காதல் என்றும், திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்றும் பரவும் வதந்திகளை எப்படி நிறுத்தவது என்று தெரியவில்லை. 

நான் விரைவில் திருமணம் செய்து கொள்வேன் அதன்பிற்கு இந்த வதந்தி நின்றுவிடும் என தெரிவித்துள்ளார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here