ரஜினியின் முதல் காதல் அனுபவம் பற்றி கூறிய நடிகர் தேவன்.!

திரையுலகில் சூப்பர் ஸ்டாராக உள்ள ரஜினிகாந்துக்கு சினிமாவுக்கு வருவதற்கு முன்பு காதலித்த அனுபவம் உள்ளது, இதனை சில படவிழாக்களில் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

0
196

திரையுலகில் சூப்பர் ஸ்டாராக உள்ள ரஜினிகாந்துக்கு சினிமாவுக்கு வருவதற்கு முன்பு காதலித்த அனுபவம் உள்ளது, இதனை சில படவிழாக்களில் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

தற்போது பாட்ஷா படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகர் தேவன், ரஜினிகாந்தின் முதல் காதல் பற்றி சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில்,

மும்பையில் பாட்ஷா படப்பிடிப்பில் நடித்துக்கொண்டு இருந்தபோது ஒருநாள் ரஜினிகாந்த் என்னையும், ஜனகராஜ், விஜயகுமார் ஆகியோரையும் விருந்துக்கு அழைத்து இருந்தார். 

அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம், ரஜினிகாந்த் தனது முதல் காதல் அனுபவம் பற்றி நினைவுகளை பகிர்ந்தார். 

ரஜினிகாந்த் பெங்களூருவில் பஸ் கண்டக்டராக இருந்தபோது மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் தவறான பக்கமாக பஸ்சில் ஏறியதை பார்த்து கோபமாக கண்டித்துள்ளார். 

பதிலுக்கு மாணவியும் ரஜினியை திட்டியுள்ளார், இந்த மோதல் நாளடைவில் நட்பாக மாறி பின்னர் காதலாக மலர்ந்துள்ளது.

ரஜினிகாந்த் அந்த பெண்ணை ஒரு நாள் தான் நடித்த நாடகத்தை பார்க்க அழைத்துள்ளார், அந்த பெண் ரஜினி நடிப்பை பார்த்து வியந்து பாராட்டி உள்ளார்.

பின்னர் ரஜினிக்கு தெரியாமலேயே அடையாறு பிலிம் இன்ஸ்டிடியூட்டுக்கு விண்ணப்பம் அனுப்பி அவருக்கு பணமும் கொடுத்து படிக்க அனுப்பி உள்ளார்.

ரஜினிகாந்த் சென்னையில் பெரிய நடிகராக உயர்ந்த பிறகு பெங்களூரு சென்று அந்த மாணவியை தேடியபோது அவர் குடியிருந்த வீட்டை காலி செய்து எங்கேயோ சென்று விட்டதை கேள்விப்பட்டு கலங்கினார், அந்த பெண்ணை எங்கு தேடியும் ரஜினியால் கண்டுபிடிக்க முடியவில்லை என கூறியுள்ளார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here