மகிந்த வெங்காய வியாபாரியாக மாறி விட்டார்.! மனோ கணேசன்

மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டு விட்டு வெங்காய வியாபாரியாக ஆகிவிட்டார் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

0
73

மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டு விட்டு வெங்காய வியாபாரியாக ஆகிவிட்டார் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

புதிய ஜனநாயாக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து வவுனியாவில் நேற்று இடம்பெற்ற பிரசார கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

எமக்கு முன்பாக உள்ள பாதை மிக தெளிவாக தெரிகிறது, இங்கு இரண்டு முகாம் இருக்கிறது. 

ஒரு முகாமிலே இனவாதிகள், அயோக்கியர்கள், கொலைகாரர்கள், பிரிவினை வாதிகள் இருக்கிறார்கள். 

மற்றைய முகாமிலே நல்லவர்கள், வல்லவர்கள், நேர்மையானவர்கள், உண்மையான தேசப்பற்றாளர்களான நாங்கள் இருக்கிறோம், அதுதான் உண்மை. 

மகிந்த மற்றும் கோட்டாவின் முகாமை பார்த்தால் அல்லது அவர்களின் பிரச்சார மேடையை பார்த்தால் அண்ணன் ராஜபக்ச, தம்பி ராஜபக்ச, குட்டி தம்பி ராஜபக்ச, மகன்ராஜபக்ச, அம்மா ராஜபக்ச, நேற்றையதினம் பிறந்த பேரன் ராஜபக்ச அப்பிடி தான் இருக்க போகிறார்கள்.  

ஆனால் எமது முகாமில் எல்லா இலங்கையர்களும் இருக்கிறோம், வடகிழக்கின் 8 மாவட்டங்களிலும் அன்னக் கொடியே ஓங்கி பறக்கிறது. 

அதேபோல மலையகம், மேல்மாகாணம் உட்பட 16 மாவட்டங்களில் நாம் வெற்றி கண்டுவிட்டோம். 

மிகுதியான மாவட்டங்களில் வரவுள்ள ஒரு வாரகாலத்திற்குள் வெற்றி அடைவோம். 

மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டு விட்டு வெங்காய வியாபாரி ஆகிவிட்டார். 

இன்று நாட்டிலே மூவின மக்களையும் ஒருமை படுத்த கூடிய ஒரே தலைவர் சஜித் மாத்திரமே. 

எமது சின்னம் அன்னம், அது தான் எமது எண்ணம் என்பதை மறந்து விடக்கூடாது என்றார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here