பாகிஸ்தானில் ஓடும் ரயிலில் நடந்த அசம்பாவிதம்.! 46 பேர் பலி

பஞ்சாப் மாகாணத்தின் தெற்கில் தேஸ்காம் ரயில் கராச்சியில் இருந்து ராவல்பிண்டி நோக்கி சென்று கொண்டு இருந்தது. 

0
58

பஞ்சாப் மாகாணத்தின் தெற்கில் தேஸ்காம் ரயில் கராச்சியில் இருந்து ராவல்பிண்டி நோக்கி சென்று கொண்டு இருந்தது. 

ரஹீம் யார் கான் நகருக்கு அருகே ரெயில் சென்று கொண்டு இருந்த போது மூன்று பெட்டிகள் தீ விபத்துக்குள்ளாக்கியது.

காலை உணவு சமைக்க ஒரு எரிவாயு  சிலிண்டரை திறந்த போது சிலிண்டர் வெடித்தது. 

இதில் பெட்டி முழுவதும் தீ பரவியது, இதனால் அலறி அடித்து ஓடிய பயணிகள் சிலர் தீப்பிழம்புகளில் இருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்து உள்ளனர்.

இந்த விபத்தில் மொத்தம் 46 பேர் பலியாகியுள்ளனர், 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விபத்து குறித்து ரெயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது,

ரெயிலில் இரண்டு சமையல் அடுப்புகள் வெடித்தன, பயணிகள் சமைத்துக் கொண்டிருந்தார்கள். 

அவர்களிடம் சமையல் எண்ணெய் இருந்தது, இது தீப் பிடிக்க முக்கிய காரணமாக அமைந்தது என கூறினார்.

மீட்பு சேவையின் தலைவர் பகீர் ஹுசைன் கூறுகையில்,

பெரும்பாலான மரணங்கள் ரெயிலில் இருந்து குதித்ததால் நிகழ்ந்தன, இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று கூறினார்.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் இம்ரான் கான் தனது வருத்தத்தை தெரிவித்ததோடு காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here