வவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றது.!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெற்றது.

0
94

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெற்றது.

அதற்கமைய வவுனியாவிலும் குறித்த வாக்களிப்பு இடம்பெற்றிருந்ததுடன், வவுனியாவின் நான்கு பிரதேச செயலகங்கள், மற்றும் ஏனைய அரச திணைக்களங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் போன்றவற்றில் தபால் மூல வாக்களிப்பிற்கான பிரத்தியேக நிலையங்கள் அமைக்கபட்டிருந்தது. 

அங்கு அரச ஊழியர்கள் தமது அஞ்சல் வாக்கினை காலை முதல் செலுத்தியிருந்தனர்.

இதேவேளை வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர்களிற்கு எதிர்வரும் 3 மற்றும் 4 நான்காம் திகதிகளில் தபால் வாக்களிப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்டத்தில் 5038 பேர் அஞ்சல் வாக்காளர்களாக விண்ணப்பித்திருந்த நிலையில்,

4140 பேரின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டும் 750 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டும் உள்ளது. 

இதில் வெளி மாவட்டங்களுக்கு 148 வாக்குகள் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர் எம்.கனீபா தெரிவித்திருந்தார்

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here