45 இலட்சம் பெறுமதியான பீடி இலைகளுடன் இருவர் கைது.!

சட்டவிரோதமான முறையில் பீடி இலைகளை ஏற்றி சென்ற ஹென்டர் வாகனத்துடன் இருவர் செய்யப்பட்டுள்ளதாக வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட போதை ஒழிப்பு பொலிசார் தெரிவித்தனர். 

0
71

சட்டவிரோதமான முறையில் பீடி இலைகளை ஏற்றி சென்ற ஹென்டர் வாகனத்துடன் இருவர் செய்யப்பட்டுள்ளதாக வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட போதை ஒழிப்பு பொலிசார் தெரிவித்தனர். 

வன்னி மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரமவின் மேற்பார்வையின் கீழ் உதவி பொலிஸ் பரிசோதகர் மாறசிங்கவின் நெறிப்படுத்தலில் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றது.

குறித்த சம்பவம்தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இன்று காலை மன்னாரில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த ஹென்டர் வாகனத்தை வவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் வழிமறித்த பொலிசார் அதில் சோதனைகளை மேற்கொண்டபோது குறித்த பீடி இலைகளை கைப்பற்றினர்.

இதன்போது 42 பொதிகளில் சுற்றிவைக்கபட்டிருந்த 1498.3 கிலோகிராம் நிறையுடைய பீடி இலைகளை பொலிசார் கைப்பற்றினர். அதன் மதிப்பு சுமார் 45 இலட்சம் என பொலிசார் தெரிவித்தனர். 

குறித்த பீடி இலைகள் இந்தியாவிலிருந்து மன்னார் கடல்வழியாக கடத்தி வரப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார்,

 குறித்த சம்பவத்தில் கல்லேவல பகுதியை சேர்ந்த ஹென்டர் வாகனசாரதி மற்றும் அதில் பயணித்த ஒருவரை கைதுசெய்தத்துடன், குறித்த வாகனத்தையும் பொலிஸ்நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

கைது செய்யபட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here